2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் சேவையின் தரம் III (Class III) இற்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் அதிகாரிகளைச் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை (Admission Cards) விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் (Online) மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இப்பரீட்சையானது கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி நடத்தப்படவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களினால் கல்வி அமைச்சு அதனைத் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையிலேயே தற்போது புதிய பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவித்தல்: பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரர்கள் தாமதமின்றி பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்திற்குச் சென்று தங்களது அனுமதிப் பத்திரங்களை தரவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.