வீட்டின் மீது மோதிய பஸ் - சாரதி வைத்தியசாலையில் அனுமதி!

​மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64 ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10.07.2026) அதிகாலை சுமார் 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், வீடு ஒன்று கடுமையாகச் சேதமடைந்ததுடன் காயமடைந்த நிலைமையில் பஸ் சாரதி மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பஸ் சாரதி கதிர்காமத்திற்கான பக்தர்களை ஏற்றிச்சென்று அவர்களை உரிய இடத்தில் இறக்கிவிட்டு, திரும்பி  வந்து கொண்டிருந்தபோதே மூதூர் 64 ஆம் கட்டைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.

நீண்ட தூரப் பயணத்தைத் தொடர்ந்து சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமின்மையே இவ்விபத்திற்கு காரணமெனவும், அதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்திருந்த  வீட்டின் மீது மோதியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக விபத்து இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இல்லாததால் எந்தவொரு உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. எனினும், வீட்டின் முன்பகுதி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

இதில் காயமடைந்த பஸ் சாரதி மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை