திருகோணமலையில் ரயிலில் மோதி நபர் ஒருவர் படுகாயமடைந்த சோகமான சம்பவம் நேற்று (26.07.2026)ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட ரயிலில், ரயில் தண்டவாளத்திற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்திலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் குறித்த நபரின் இடது காலின் கீழ்பகுதி துண்டிக்கப்பட்டு தீவிர காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து தொடர்பிலும், பாதிக்கப்பட்ட நபரின் அடையாளம் குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.