நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராக திருமதி என். ஆர். அனீஸ் மற்றும் உறுப்பினர்களில் ஒருவராக மட்டக்களப்பு, களுதாவளையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரச அதிபர் கே. கருணாகரன் ஆகியோர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் ஏனைய உறுப்பினராக ஜே.எம்.சி.ஜே. விஜேதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி ஆணைக்குழுவின் முந்தைய உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையிலேயே இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான நியமனக் கடிதங்களை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (20.07.2026) ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.