அம்பாறை மாவட்டம்
மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு (Petrol Shed) அருகில் இன்று (16.07.2026) காலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கதிர்காமத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை அல்லது தனியார் பேருந்து (பஸ்வண்டி) ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடையாளம் காணப்படாத உடல்.
விபத்தில் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், அவர் காலணிகள் மற்றும் காலுறைகள் (Socks & Shoes) அணிந்திருந்த நிலையைக் கொண்டு, அவர் காரியாலய உத்தியோகத்தர் (Office staff) ஒருவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை மற்றும் உயிரிழந்தவரின் விபரங்களை உறுதிப்படுத்தும் பணிகளில் கல்முனை மற்றும் பெரியநீலாவணை போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.