கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் சேனரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக செயற்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய மகேஷ் சேனரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொலிஸ் திணைக்களத்தின் சேவைத் தேவை கருதி இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியாவார்.