அம்பாறை மாவட்டம் திருக்கோவில் - விநாயகர்புரம் பகுதியில் இன்று(27.07.2026)ஆம் திகதி இடம்பெற்ற கோர வீதி விபத்தில் வவுனதீவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென ஓட்டுநரின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதிலேயே இவ்வேதனைக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் வவுனதீவுப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அனைவரும் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.