எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு.!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று(31.07.2026) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை ஆய்வு செய்த பின்னர், நாட்டில் எரிபொருள் விலைகள் தொடர்பிர் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை 89.69 டொலராகவும், ஒரு பரல் WTI கச்சா எண்ணெய்யின் விலை 84.5 டெலராகவும் பதிவாகியுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை