மாணவியின் திடீர் மறைவு - ஐயனார்புரத்தில் சோகம்!

ஐயனார்புரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம்-09 இல் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (28.07.2026) தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​பாடசாலையில் கல்விச் செயல்பாடுகளில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்து வந்த இவரின் திடீர் மரணம், பாடசாலைச் சமூகத்தையும் கிராம மக்களையும் ஆதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.

​குறித்த மாணவி கடந்த சில காலமாகவே தீவிரமான உடல் உபாதையினாலும், உள்-உறுப்புச் சார்ந்த நோய் பாதிப்பினாலும் அவதியுற்று வந்துள்ளார். இதற்காக வைத்தியசாலையினால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கான திகதியும் வழங்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.

​இந்நிலையில், நோய் பாதிப்பினால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகவே மாணவி இத்தகைய துயர முடிவை எடுத்திருக்கலாம் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
​சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை