மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி.!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் தபாலகத்திற்கு முன்னால்  முச்சக்கரவண்டி ஒன்று இன்று (29.07.2026) ஆம் திகதி மாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மட்டக்களப்பு பக்கமிருந்து நிந்தவூர்  நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி குருக்கள்மடம்  தபாலகத்திற்கு அண்மையில் பயணிக்கும் போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அண்மையில் அட்டப்பள்ளத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகனை பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
புதியது பழையவை