கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த திரு. பொ. வாகீசன் அவர்கள் இன்று(22.07.2026)
கிழக்கு மாகாண கெளரவ ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டார்.
இவர் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த ஒரு மூத்த அரச அதிகாரியாவார். இவர் வடமாகாணத்தில் பல்வேறு முக்கிய நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார்.
வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக,
வடமாகாணத்தில் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக,
வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளராக,கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளராக
வடமாகாண ஆளுநரின் செயலாளராக இவ்வாறு பல உயர் பதவிகளை வகித்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.