தெற்கு ஜப்பானின் குமமோட்டோ (Kumamota) பகுதியில் இன்று (28.07.2026) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கைகலாச்சாரம்
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று 7.1 என்ற ஆரம்பகட்ட அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் பலர் காயமடைந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அரியாகே மற்றும் யட்சுஷிரோ கடற்பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
பின்னர் அவை அப்பகுதிகள் இரண்டிற்கும் திரும்பப் பெறப்பட்டன.
ஜப்பானிய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி மாலை 4:27 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் குமாமோட்டோ மாகாணத்தில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.