பெண் கான்ஸ்டபிளுக்குப் பாலியல் தொல்லை..!

சக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தமை மற்றும் அநாகரிகமான பாலியல் செயலில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் , புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, கைது செய்யப்பட்டு, மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை இம்மாதம் 15-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம மேலதிக நீதவான் புத்திக மல்வத்த உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி,

சம்பவம் நடந்த தினத்தன்று பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த கான்ஸ்டபிளுக்கு, பொறுப்பதிகாரி தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு அவசரப் பணியின் நிமித்தமே தன்னை அழைப்பதாகக் கருதிய அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள், பொறுப்பதிகாரியின் இல்லத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற போதே, பொறுப்பதிகாரி தனக்குக் குறித்த பாலியல் தொல்லைகளைக் கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரியின் முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸ் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை