மூதூர் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை - 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது!

​கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி திருகோணமலை மாவட்டம் மூதூரில், 'Action Against Hunger' (ACF) நிறுவனத்தில் பணியாற்றிய 17 தமிழ் நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (08.08.2026) ஆம் திகதி மூதூரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

​இந்நிகழ்வின் போது படுகொலை செய்யப்பட்ட நிவாரணப் பணியாளர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தி தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

​மேலும், இந்நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. ஶ்ரீநேசன், வைத்தியர் இ. சிறிநாத், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மா. நடராசா, சமூக அரசியல் செயல்பாட்டாளர் வேலன் சுவாமிகள், அருட்தந்தை ஜெகதாஷ், மூத்த ஊடகவியலாளர் திருமலை நவம் உட்படப் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு நினைவு வணக்கம் செலுத்தினர்.
புதியது பழையவை