பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04.08.2026) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான், இந்த வழக்கில் 3 ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.