செஞ்சோலை இனப்படுகொலையின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

​செஞ்சோலை வளாகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரப் தாக்குதலின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(14.08.2026) காலை 10:00 மணியளவில் மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள YMCA மண்டபத்தில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

​இந்நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு, தாக்குதலில் அநியாயமாக உயிரிழந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்குச் சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தித் தமது ஆழந்த அஞ்சலியினைத் தெரிவித்தனர்.
​நினைவேந்தலின் போது உரையாற்றிய பிரதிநிதிகள், செஞ்சோலைச் சம்பவத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும், அதில் பலியான அப்பாவி உயிர்களின் தியாகத்தையும் நினைவுகூர்ந்ததுடன், நியாயமான நீதியின் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
புதியது பழையவை