இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் உள்ள இந்தியா ஹவுஸில் (15.08.2026) நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியான திரங்காவை ஏற்றி சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னெடுத்தார்.
இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய சமூகத்தினரும் நிகழ்வில் கலந்துகொண்டு, இந்தியாவின் மீதான தங்களது பெருமையையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தினர்.