கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று(02.08.2026) பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
கடல் பிராந்தியங்களில்
சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.