கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் விபத்தில் காயம் - மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் அவர்கள் நேற்று (03.08.2026) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


​கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

​தாழங்குடா பகுதியில் அவர் பயணித்த வாகனம் மாடொன்றுடன் மோதியதில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காயமடைந்த வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்கள், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
புதியது பழையவை