இன்றைய வானிலை முன்னறிவிப்பு.!

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,  வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்  பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.

சப்ரகமுவ, மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்  


சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில்  தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக சிலாபம் வரையான  அத்துடன் மாத்தறை தொடக்கம்  ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

புத்தளம் தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான  கடல் பிராந்தியத்தில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.0 m உயரத்திற்கு மேலெளக்கூடும்.  பேருவளை தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியத்தை அண்மித்த கரைப் பிரதேசத்திற்குள் கடல் நீர் உட்புகக்கூடும். ஆகையினால் இப் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அத்துடன் கரைப் பிரதேசத்தை அண்மித்துள்ள பொதுமக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
புதியது பழையவை