முதலாவது மாமனிதர் என்ற பெருமைக்குரிய ஆ.இராசரத்தினம்.!

ஈழத்தில் ஆயுதப்புரட்சியை தமிழர்கள்  ஏற்படுத்தாவிட்டால் தமிழினம் அழிந்துவிடும்,  ஐம்பதாயிரம் இளைஞர்கள் இருந்தால் எமது மண்ணை மீட்டுவிடலாம்" என்ற 1961, காலப்பகுதியில் அறைகூவலை முதன்முதலில் விடுத்தவர் ஆவார். 

04.03.1961இல் சிங்கள ஸ்ரீக்கு எதிராக திருகோணமலை கச்சேரிவாயிலில் மறியல்செய்த தமிழர்கள் மீது சிறிலங்கா காவாலித்துறை தடியடிநடத்தியது. இத்தாக்குதலில் காயம டைந்த மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் 23.03.1961 அன்று காலமானார்.       

அவருடைய இறுதிச்சடங்கு மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடந்தேறியது. இதனைத்தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் அகிம்சாவழி தமிழர்கட்கு விமோ சனத்தை ஈட்டித்தராது என இதில் கலந்துகொண்ட உணர்வாளர்கள் சிலரால்,  சிங்கள அரசின் வன்முறைக்கு வன்முறையே  பதிலென்ற முடிவில் அமைப்பொன்று கோபாவேசத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

மேற்படி அமைப்பில் ஏறத்தாள இருபதுபேர்வரை இணைந்திருந்ததாக மூத்தபத்திரிகையாளரான சபாரத்தினம் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கோணேஸ்வரத்தில் உறுதியெடுத்தவர்களில் மாமனிதர் இராசரத்தினமும் ஒருவராவார்.

"புதிய தமிழ்ப் புலிகள்" என்ற பெயருடன் 1972,மே,22,ல், தேசிய தலைவர் பிரபாகரனால் தொடங்கப்பட்ட அமைப்பு பின்னர் 1976,மே,05 அன்று "தமிழீழ விடுதலைப் புலிகள்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
புதிய புலிகள் என்ற பெயரை மாமனிதர் ஆ. இராசரெத்தினம் அவர்களே பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

1975,ஆகஷ்ட்,19, ல் அவர் இயற்கை எய்தினார், 1990, ல் மாமனிதர் கௌரவம் வழங்கப்பட்டது.

1990இல் அவருடைய  சொந்த இடமான (மட்டுவில்) சாவகச்சேரியில் நடைபெற்ற   முத்தமிழ் விழாவில்  தேசிய தலைவர் "தமிழீழத்தின் முதலாவது மாமனிதர்’என மதிப்பளித்தார்.

(ராஜீவ் கொலைவழக்கில்  மனிதக்குண்டுநடத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட "தனு”இவரது மகள் எனக்கூறப்படுகிறது, அது உண்மை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை)

மாமனிதர் ஆ.இராசரெத்தினம் அவர்களின் 51,வது நினைவுநாள் இந்தமாதம் கடந்த 19/08/2026, என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை