விபத்துக்கள் நேர்ந்தால் வாகனம் ஓட்டிய வரைப் போல் வாகனம் கொடுத்தவருக்கு அதே தண்டனை உண்டு!!
இலங்கையில் செல்லும் படியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத ஒருவருக்கு மோட்டார் சைக்கிள் அல்லது எந்த வொரு வாகனத்தையும் ஓட்ட அனுமதிக்கும் நபர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக கைது செய்ய படுவார்கள் என இலங்கை பொலீஸ்சார் எச்சரித்துள்ளர்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் உரிமம் இல்லாத நபர் மட்டுமன்றி அவருக்கு வாகத்தை வழங்கிய நபரும் சமமான குற்றவாளியாகவே கருதப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மோட்டார் வாகனச் சட்டத்தின் (motor traffic Act) தகுந்த சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை ஓட்டிக் கொடுப்பது பாரதூரமான குற்றமாகும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு 25.000 ரூபாய் முதல் 50.000 ரூபாய் வரையில் கடுமையான அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட சட்டத்தின் இடமுண்டு...
அத்தோடு இலங்கையில் ஒரு சில இடங்களில் சுற்றுலாப் பிரதேசங்களில் வெளிநாட்டு பிரஜைகள் பலர் முறையான இலங்கை சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது சர்வதேச ஓட்டுநர் உரிமம் இன்றி மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து ஓட்டுவது கண்டறியப்பட்டது..
இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வாடிக்கையாளின் ஓட்டுநர் உரிமத்தை முழுமையாக சரிபார்த்த பின்னரே வாகனங்களை வழங்க வேண்டும் என இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத நபர் ஒருவர் வாகனத்தை ஓட்டிச் சென்று எதேனும் விபத்துக்களை ஏற்படுத்தினால் வானத்தில் உரிமையாளரும் அந்த விபத்துக்கான முழுப் பொறுப்பாளியாக கருதப்படுவார்.
விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் அல்லது சேதங்களுக்கு வாகன உரிமையாளரும் சட்ட ரீதியாகப் பதிலளிக்க வேண்டும் என்பதுடன் அவர்களது வாகன காப்புறுதி இன்சூரன்ஸ் நன்மைகளும் ரத்து செய்யப் பட வாய்ப்புள்ளது என இலங்கை பொலீஸ்சார் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் ஏலவே இருக்கும் சட்டங்கள் தான் ஆனால் இனி அவை கடுமையான முறையில் பாரபட்சமின்றி அமுல் படுத்தப்படும்.
எனவே பொது மக்கள் தங்களது வாகனங்களை மற்றவர்களுக்கு வழங்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இலங்கை பொலீஸ்சார்.