திருகோணமலை தபால் நிலைய சந்தி பஸ் தரிப்பிடத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த முதியவர் உயிரிழப்பு.!

​திருகோணமலை தபால் நிலைய சந்திக்கு அருகில், கொமர்ஷல் வங்கிக்கு முன்னால் அமைந்துள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் நீண்டநாட்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் தங்கியிருந்த வயோதிப பெண் ஒருவர் இன்று(22.08.2026)ஆம் திகதி மாலை  உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

​நீண்டநாட்களாக உடலநலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண், இன்று பஸ் தரிப்பு நிலையத்தினுள்ளேயே உயிரிழந்து காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை