யாழ்ப்பாணம், குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02.08.2026) ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற பட்டாசு வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
மடு மாதா ஆலய யாத்திரையை முன்னிட்டு அப்பகுதியில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டுப் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
இதன்போது, கொளுத்தப்பட்ட பட்டாசுகளில் ஒன்று வெடிக்காமல் இருந்துள்ளது.
வெடிக்காமல் இருந்த அந்தப் பட்டாசை மீண்டும் வெடிக்கச் செய்யும் நோக்கில் குறித்த இளைஞர் அதனை நெருங்கிச் சென்று முற்பட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பட்டாசு திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த யாழ்ப்பாணப் பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளதுடன், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.