மட்டக்களப்பில் சுடர் ஒளி விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

​மட்டக்களப்பு, செங்கலடி கொம்மாதுறை சுடர் ஒளி விளையாட்டுக் கழகத்தின் கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களினால் நேற்றைய தினம் (28.08.2026) பெறுமதிமிக்க கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

​இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுடன் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன், கொம்மாதுறை வட்டார பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரன் மற்றும் சுடர் ஒளி விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர் அசோக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
​இப்போட்டிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கிடைக்கப்பெற்றமைக்காகவும், இந்நிகழ்விற்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் கழக உறுப்பினர்களுக்கும் சுடர் ஒளி விளையாட்டுக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

​பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியின் மூலம், மாவட்டத்தில் கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வரும் தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டுத் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை