முல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இன்று (09.08.2026)ஆம் திகதி அதிகாலை A9 கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் பாரிய வீதி விபத்தொன்று சம்பவித்துள்ளது.
இளநீர் ஏற்றிச் சென்ற பொலிரோ (Bolero) ரக வாகனமும் டிப்பர் வாகனமும் ஒன்றோடொன்று மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது டிப்பர் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததில், அதன் சாரதி வாகனத்தினுள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள் மற்றும் ஏனையோரின் சுமார் ஒரு மணி நேரத் தீவிர போராட்டத்தின் பின்னரே சாரதி பத்திரமாக மீட்கப்பட்டார்.
இவ்விபத்தில் இளநீர் ஏற்றி வந்த பொலிரோ வாகனமும் டிப்பர் வாகனமும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.