மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் - சந்தேகநபர் பொலிஸாரால் கைது.!

​மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இன்று (24.08.2026)ஆம் திகதி  சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

​சம்பவ இடத்தில் நின்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு பொதுமக்கள் உடனடியாக இது குறித்து தகவல் வழங்கியதுடன், அவர்களின் உதவியுடன் வெல்லாவெளி பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது.
​சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை