கினிகத்தேனையில் கார் - லொறி மோதி கொடூர விபத்து - பலர் காயம்!

கினிகத்தேனை காவல் துறை எல்லைக்குட்பட்ட பிரதான வீதியில் இன்று(26.08.2026)ஆம் திகதி  மாலை காரொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

​காரும் லொறியும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடனொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தின் தீவிரத்தன்மை காரணமாக கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்தவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

​காயமடைந்தவர்கள் உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை