நாட்டில் நிலவி வரும் தீவிர மழையுடனான சீரற்ற காலநிலைக்கு மத்தியில், வீட்டின் அறையில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று(20.09.2026)மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அகலவத்தை, தெல்பே - ஹல்ஓவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அகலவத்தை மிஹிந்து மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த ஹசித பிரதீப் குமார என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போது குறித்த மாணவன் வீட்டின் அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, அருகில் சுவரில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பு பலகையில் (Plug Point) மின்னல் தாக்கியதில், அதன் தாக்கம் தரையில் படுத்திருந்த மாணவனையும் பலமாகத் தாக்கியுள்ளது.
மின்னல் தாக்கலினால் படுகாயமடைந்த மாணவன் உடனடியாக அகலவத்தை பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சோகச் சம்பவம் தொடர்பில் அகலவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.