அனோஜனின் விடுதலைக்காக இனம், மதம் கடந்து திரண்ட மக்கள் - நற்பிட்டிமுனையில் பிரம்மாண்ட கையெழுத்து போராட்டம்.!

சவுதி அரேபியாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்காக, இனம், மதம் மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து மக்கள் ஆதரவு திரட்டும் வகையில் பிரம்மாண்டமான கவனயீர்ப்புப் போராட்டமும் கையெழுத்து சேகரிப்பு நிகழ்வும் இன்று (20.09.2026)ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  நடத்தப்பட்டது.

​நற்பிட்டிமுனை முதலாம் கட்டைச் சந்தியில் இன்று காலை 9:00 மணி அளவில் ஆரம்பமான இந்நிகழ்வு, பிரதேச மக்களின் முழுமையான ஆதரவுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​ஒரு மனித உயிரைப் பாதுகாக்கும் தூய மனிதாபிமான நோக்கத்திற்காக, கட்சி, மதம் மற்றும் பிரதேச பேதங்களை மறந்து பெருந்திரளானோர் ஒன்றிணைந்தனர்.

அனோஜனின் விடுதலைக்கான நீதியை வலியுறுத்தியும், அவருக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் பிரதேச பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் திரளாகப் பங்கேற்றுத் தமது ஆதரவுக் கரங்களை நீட்டினர்.
புதியது பழையவை