மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையின் உள்ளூராட்சி வார 2ஆம் நாள் நிகழ்வு.!

மட்டக்களப்பு மாவட்டம் ​போரதீவுப்பற்று பிரதேசசபையினால் "வளமான நாடு – அழகான வாழ்வு புத்துயிர்க்கும் புதுநகரம்" எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி வாரத்தின் 2ஆம் நாள் "பொதுப் பயன்பாட்டு தினம்" நிகழ்வு நேற்று (15.09.2026 - செவ்வாய்க்கிழமை) திக்கோடை பொதுநூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

​போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்தாலோசனை நிகழ்வில் சபைச் செயலாளர் சண்முகராஜா விஜிதராஜா, திக்கோடை வட்டார உறுப்பினர் அ.பிறேமாகரன், மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் சு.இளமாறன் ஆகியோருடன் பிரதேசசபை உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் மற்றும் கிராமியச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இக்கலந்தாலோசனை நிகழ்வில் திக்கோடை கிராம மக்கள் மட்டுமன்றி, அதன் அயல் கிராமங்களான 40ஆம் கிராமம், 38ஆம் கிராமம், செல்வாபுரம் மற்றும் தும்பாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்களும் வருகை தந்து தமது கோரிக்கைகளை முன்வைத்து பயனடைந்தனர்.

கூட்டத்தின் போது அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் முக்கிய அடிப்படைப் பிரச்சினைகளான.

​குடிநீர் விநியோகம்
​வீதி அபிவிருத்தி பணிகள்
​தெருவிளக்கு பராமரிப்பு
​திண்மக்கழிவு மேலாண்மை
​ஆகியவை குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

​நேரடி கள விஜயமும் உடனடித் தீர்வும்.

பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குறைகள் தொடர்பில் உடனடியாகக் கவனஞ்செலுத்திய தவிசாளர் வி.மதிமேனன், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வுகளை மேற்கொண்டார்.

அத்துடன், மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உடனடித் தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்தார்.

மேலும், ஏனைய நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடைமுறை வழிமுறைகளை முன்மொழிந்து, அவற்றை விரைந்து செயல்படுத்துவதற்கான தீர்மானங்களையும் சபை நிர்வாகம் மேற்கொண்டது.
புதியது பழையவை