காத்தான்குடி சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரநடுகை நிகழ்வு.!

“புத்துயிர்க்கும் புதிய நகரம்” – உள்ளூராட்சி வாரம் 2026 நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, சுற்றுச்சூழலும் மரநடுகையும் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி நகரில் மரநடுகை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் 15.09.2026 அன்று காலை 9.00 மணிக்கு பத்ரியா மையவாடி முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டதுடன், அவற்றை முறையாக பராமரித்தல் மற்றும் நகரின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதன் அவசியம் தொடர்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகரின் பசுமைச் சூழலை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை முன்னிறுத்தி இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

“ஒரு மரம் – ஒரு நம்பிக்கை; பசுமையான நகரம் – வளமான எதிர்காலம்” என்ற எண்ணத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நிறைவு பெற்றது.
புதியது பழையவை