விபத்துக்குள்ளான பேரூந்து: 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

​மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​இன்று வியாழக்கிழமை (10.09.2026) அதிகாலை 4.45 மணியளவில், பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
​மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த தனியார் பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்துள்ளதா தெரிவிக்கப்படுகிறது.
​விபத்தில் காயமடைந்த 22 பயணிகளும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

​இதேவேளை, விபத்து இடம்பெற்ற குறிப்பிட்ட வளைவுப் பகுதியானது அடிக்கடி விபத்துகள் பதிவாகும் ஆபத்தான இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

​இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை