மட்டக்களப்பு களுதாவளையில் மீண்டும் வீதி விபத்து - கார் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுதாவளை பகுதியில் இன்று (10.09.2026) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறிய ரக கார் சாரதி காயமடைந்துள்ளார்.

​நேற்றைய(09.09.2026) தினமும் களுதாவளை பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகி அதன் சாரதி காயமடைந்திருந்த நிலையில், இன்றை தினமும் அதே பகுதியில் மற்றொரு விபத்து பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
​இன்றைய விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையாவது.

​கிண்ணியாவில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த சிறிய ரக கார் ஒன்று, களுதாவளை பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக டிப்பர் வாகனத்தின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

​சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை மயக்கமே இந்த விபத்துக்கு முதன்மை காரணம் எனக் கூறப்படுகிறது.

​விபத்தில் சிறிய அளவிலான காயங்களுக்குள்ளான கார் சாரதி, உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை