இலங்கை நாடாளுமன்றில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது!

​இலங்கை நாடாளுமன்றத்தில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பங்கு சிறப்புப் பெரும்பான்மையுடன் இன்று (25.09.2026) ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.

​இன்று நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் பதிவாகின.

​முன்னதாக, இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை