களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் 50 கிலோ பழுதடைந்த வெங்காயம் பறிமுதல் செய்து அழிப்பு.!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட 50 கிலோகிராம் பழுதடைந்த வெங்காயத்தை சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று (15.09.2026, செவ்வாய்க்கிழமை) கைப்பற்றி உடனடியாக அழித்துள்ளனர். 

அத்துடன், தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு பகிரங்க எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.
​இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் உணவிற்காக வெங்காயத்தைக் கொள்முதல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்களையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

​தரமான வெங்காயத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான அடையாளங்கள்.

​வெளித்தோலில் மண், அழுக்கு அல்லது பூஞ்சணங்கள் இருக்கக்கூடாது. 

ஈரப்பதம் இருந்தால் விரைவில் அழுகிவிடும் என்பதால், தோல்கள் நன்றாக உலர்ந்திருக்க வேண்டும்.

மெலிந்த, பழுதான அல்லது அழுகிய பகுதிகள் இருக்கக்கூடாது. 

துளைகள், புழுக்கள் மற்றும் பூச்சிச் சேதங்கள் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வெங்காயம் தொடுவதற்கு உறுதியாகவும், அதன் இயல்பான வடிவம் மற்றும் நிறத்துடனும் இருக்க வேண்டும்.

​துர்நாற்றமோ அல்லது புளிப்பு மணமோ வீசாமல், வெங்காயத்திற்குரிய இயல்பான வாசனை மட்டுமே இருக்க வேண்டும்.

​வெங்காயத்தின் மேல்பகுதியில் முளைகள் (sprouts) வந்திருக்கக் கூடாது.

​இவ்வாறான தரம் மற்றும் சுகாதார அம்சங்களைக் கொண்ட வெங்காய மட்டுமே உணவுக்குப் பாதுகாப்பானது என்பதால், பொதுமக்கள் சந்தைகளில் பொருட்களை வாங்கும்போது கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதியது பழையவை