மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து வாவிக்குள் குதித்த வாலிபர் - தேடுதல் நடவடிக்கை தீவிரம்.!

​மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து மட்டக்களப்பு வாவிக்குள் இளைஞர் ஒருவர் குதித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​இன்று (15/09/2026) பிற்பகல் 01:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாவிக்குள் குதித்த இளைஞர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரது சடலம் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.

​சம்பவத்தை தொடர்ந்து, மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகளும் இலங்கை கடற்படையினரும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வாவியில் குதித்த இளைஞர் பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.

​இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை