கிளிநொச்சி A9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09-09-2026)ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
A9 வீதியூடாகப் பயணித்த கார் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்து நடந்ததைத் தொடர்ந்து, காரின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து சரணடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.