மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுதாவளைப் பகுதியில் சற்று முன்னர் (09.09.2026) வேன் ஒன்று வீதியோர மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கல்முனை திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்த வெள்ளை நிற ‘மிட்சுபிஷி’ (Mitsubishi) ரக வேன் ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது வேனின் முன்பகுதி மற்றும் சாரதிப் பகுதி கடுமையாக நசுங்கிச் சேதமடைந்துள்ளதுடன், அதன் முன்கண்ணாடி முற்றிலும் நொறுங்கியுள்ளது.
வீதியில் இரத்தக்கறைகள் காணப்படுவதால், விபத்தில் பயணித்தவர்கள் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.