சந்திவெளியில் கொடூர வீதி விபத்து - கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

மட்டக்களப்பு - சந்திவெளிப் பகுதியில் இன்று (09.09.2026) அதிகாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

​கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

​இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.

​உயிரிழந்த இளைஞன் பாசிக்குடாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில, இன்று தன் சொந்தக் கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, இரவுப் பணியை முடித்துக்கொண்டு அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் கிரான்குளம் நோக்கிப் பயணித்துள்ளார்.

​அவர் சந்திவெளிப் பகுதியைக் கடந்து சென்றபோது, எதிரே வந்த பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
​இச்சம்பவம் கிரான்குளம் கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

​இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை