மட்டக்களப்பில் சோகம்- திருமணமாகி சில நாட்களிலேயே இளம்பெண் உயிரிழப்பு!

.
​மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நிரஞ்சன் நிறோஜினி  எனும் இளம்பெண் ஒருவர் இன்று (19.09.2026)ஆம் திகதி  தனது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

​கடந்த செப்டம்பர் 16, 2026 அன்று மகிழடித்தீவு கலாச்சார மண்டபத்தில் பெற்றோரின் ஆசியுடன் இவருக்குத் திருமணம் நடைபெற்று முடிவடைந்த நிலையில், திருமணமாகி சில நாட்களிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

​இவ்வுயிரிழப்பிற்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

​திருமணமான புதிதிலேயே இடம்பெற்ற இந்த எதிர்பாராத துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை