எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து யுவதி உயிரிழந்துள்ளார்.!

எல்ல போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்ல நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய வெளிநாட்டு யுவதி ஒருவர், நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

​இன்று (24.09.2026) மதியம் இரண்டு யுவதிகள் குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எல்ல சுற்றுலாத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

​சம்பவம் குறித்துத் தெரியவருகையில்,
​நீர்வீழ்ச்சியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் குறித்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரதேச மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் பாரிய சிரமத்திற்கு மத்தியில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.

​மீட்கப்பட்ட சடலம் 1990 சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை ஊடாகப் பிரேத பரிசோதனைகளுக்காகப் பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதியில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, எல்ல நீர்வீழ்ச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆபத்தான பகுதிகளைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸாரும் அதிகாரிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை