யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நாளையதினம் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு.!

​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் நாளையதினம் (25.09.2026) அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (24.09.2026) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே குறித்த அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

​மாணவர் சமூகத்தின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும் இந்த போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

​நாளையதினம் இடம்பெறவுள்ள இந்த கவனயீர்ப்பு மற்றும் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்குப் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு மாணவர் சமூக பிரதிநிதிகள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை