யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி சாதனங்களை நேற்றைய தினம் (18.09.2026) யாழ்ப்பாணப் பொலிஸார் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, நல்லூரிலுள்ள அவரது நினைவுத்தூபி வளாகத்தில் பாடல்கள் மற்றும் நினைவேந்தல் ஒலிப்பதிவுகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், பொதுவெளியில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை எனக் கூறி அங்கிருந்த ஒலிபெருக்கிகள் மற்றும் அதற்குரிய சாதனங்களை அள்ளிச் சென்று கைப்பற்றியுள்ளனர்.