மட்டக்களப்பு நகரில் வீதி வழிப்பறி முயற்சி - பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள்!

மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற சம்பவம் நேற்று சனிக்கிழமை (05.09.2026) ஆம் திகதி இரவு இடம் பெற்றுள்ளது.

​ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள ஆலய வீதியில் இரு பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளார்.

​அந்நபர் மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றபோது, அப்பெண் சத்தமிட்டுள்ளார். 

இதனால் அச்சமடைந்த வழிப்பறிக் கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.

​இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நகர்ப் பகுதியில் நடமாடும் பெண்கள் தமது தங்க நகைகள், கைபேசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைக் கொண்டு செல்லும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதியது பழையவை