ஜனாதிபதியின் எண்ணக்கருவில்,
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில், அதன் இரண்டாம் கட்டமாக கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட
பல பகுதிகளில் அவ்வேலைகள்
(19.09.2026) கல்முனை - 01 (இஸ்லாமாபாத்) பகுதியில் கல்முனை பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் ரி.எம். முஹம்மட் அன்சார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ அம்பாரை மாவட்ட கரையோரப்பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம்.நெளபீஸ்
அம்பாரை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய நிகழ்வுகள் கல்முனை, நற்பிட்டிமுனை மற்றும்
மருதமுனை பகுதிகளிலும் இடம் பெற்றது. அந்த வகையில் மருதமுனை பெரியநீலாவணை - 01 முஸ்லிம் பிரிவில் அமைந்துள்ள சமுர்த்தி வீதி மற்றும் வடிகான்“அத்தம” வேலைத்திட்டத்தின் கீழ் மாபெரும் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த வீதியில்
நீண்டகாலமாக வடிகான்களில் தேங்கிக் கிடந்த குப்பைகள், மண் மற்றும் கழிவுப் பொருட்கள் கனரக இயந்திரங்களின் உதவி மற்றும் ஏனையோரின் உதவியுடன் அகற்றப்பட்டு, வடிகான்கள் சீரமைக்கப்பட்டதுடன் வெளிப்புறப் பகுதிகள் அனைத்தும் இதன்போது சுத்தம் செய்யப்பட்டன.
இத்தூய்மைப் பணியில் கல்முனை பிரதேச செயலகம் சார்பில் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், சமூக அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், சுகாதார அதிகாரிகள், கல்முனை மாநகர சபை ஊழியர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், முப்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஒன்றிணைந்து சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.
தூய்மையானதும் அழகானதுமான சூழலை உருவாக்குதல், பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் இச்சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.