சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்பவருக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி, அட்டன் மல்லியப்பு சந்தியில் இன்று (20.09.2026) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படங்கள் தாங்கிய பதாகைகளையும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.