யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த புதிய திருவுருவச் சிலை இன்று (27.09.2026) காலை பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டது.
திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக செப்டம்பர் 15ஆம் திகதி நல்லூர் நினைவாலயத்தில் புதிய வெண்கலச் சிலை நிறுவப்பட்டிருந்தது.
நேற்றையதினம் செப்டம்பர் 26ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை நினைவாலயத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த சிலையை அகற்றிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக இந்த ஆண்டும் முன்னதாக பொலிஸாரின் தலையீடுகள் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன.