நல்லூரடியில் திலீபனின் உருவச்சிலை அகற்றம் - பொலிஸார் மீது கஜேந்திரன் குற்றச்சாட்டு.!

யாழ்ப்பாணம் நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்று இடம்பெற்ற நிலையில், இன்று (28.09.2026)ஆம் திகதி காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித முன்னறிவித்தலும் வழங்கப்படாத நிலையில், 15க்கும் மேற்பட்ட பொலிஸார் வாகனங்களில் வந்து, சப்பாத்துக் கால்களுடன் உள்ளே சென்று பலவந்தமாக திலீபனின் உருவச்சிலையை அகற்றிச் சென்றதாக செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தரப்பிலிருந்து இதுவரை வெளியாகியுள்ள விளக்கம் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை.
புதியது பழையவை