பிரான்சில் ஆரம்பமானது தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

​தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று பிரான்சின் லாச்சப்பல் தமிழர் வர்த்தக மையத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகின.

இன்று காலை 9.45 மணியளவில் ஆரம்பமான வணக்க நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இன்று ஆரம்பமான இந்த நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை லாச்சப்பல் தமிழர் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பொதுமக்கள் மலர் வணக்கம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக அகிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் தியாகத்தையும் இலட்சியத்தையும் நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


புதியது பழையவை